
ரூ. 10 மில்லியன் செலவில் பாரிய அபிவிருத்தித் திட்டம் சாய்ந்தமருதில் இன்று (26/10/2026) பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா இனால் ஆரம்பித்து வைப்பு !!
சாய்ந்தமருது மக்களின் நீண்டகால எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், சாய்ந்தமருது முகத்துவார Lagoon அண்டிய பிரதேசத்தை நவீன முறையில் அபிவிருத்தி செய்யும் முகமாக 10 மில்லியன் ரூபா பெறுமதியான பாரிய அபிவிருத்தித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக நடைபெற்றது.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் முயற்சியில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா, மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட பிரதான கணக்காளர் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
சாய்ந்தமருது பிரதேசத்தின் அழகை மேம்படுத்துவதுடன், பொதுமக்களுக்கான சிறந்த பொழுதுபோக்கு மற்றும் ஓய்விடமாக முகத்துவாரப் பிரதேசத்தை மாற்றியமைக்கும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
சாய்ந்தமருது மக்களின் நீண்டகால எதிர்பார்ப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் முகத்துவாரப் பிரதேசத்தின் அபிவிருத்தி, இத்திட்டத்தின் ஊடாக புதிய பரிமாணத்தைப் பெறவுள்ளது.
இயற்கை வளங்களைப் பாதுகாத்து, பிரதேசத்தின் சுற்றுச்சூழல் அழகை மேம்படுத்துவதுடன், மக்களின் ஓய்வு மற்றும் பொழுதுபோக்கிற்கான சிறந்த இடமாக இப்பகுதியை உருவாக்குவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
சாய்ந்தமருதின் அழகை மேம்படுத்தி, மக்களின் வாழ்வியலை வளப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்த 10 மில்லியன் ரூபா அபிவிருத்தித் திட்டம், பிரதேசத்தின் எதிர்கால வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஊடகப் பிரிவு –


