
மாத்தறை, குடாவெல்ல பகுதியில் இருந்து நான்கு மீனவர்களுடன் கடலுக்குச் சென்ற மீன்பிடிப் படகொன்று காணாமல் போயுள்ளது.
காணாமல் போன மீனவர்களையும் படகையும் கண்டறிவதற்காக இலங்கை கடற்படையும் விமானப்படையும் இணைந்து கூட்டுத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில், காணாமல் போன நான்கு மீனவர்களையும் மீன்பிடிப் படகையும் கண்டறிவதற்கான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


