வீடுகள் நிர்மாணித்துத் தருவதாகக் கூறி ரூ. 38.7 மில்லியன் மோசடி – இருவர் கைது!

வீடுகள் நிர்மாணித்துத் தருவதாகக் கூறி ரூ. 38.7 மில்லியன் மோசடி – இருவர் கைது!

வீடுகளை நிர்மாணித்துத் தருவதாகக் கூறி, 38 மில்லியன் 770 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிறுவனத்தின் பணிப்பாளர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட சந்தேகநபர்கள், வீடுகளை நிர்மாணித்துத் தருவதாகக் கூறி பலரிடமிருந்து பணத்தைப் பெற்றுள்ளனர்.

எனினும், ஒப்புக்கொண்டபடி நிர்மாணப் பணிகளை முழுமையாக நிறைவு செய்யாமல், சில பணிகளை மாத்திரம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, குறித்த மோசடித் திட்டத்தின் மூலம் மொத்தம் 38 மில்லியன் 770 ஆயிரம் ரூபாய் பணம் பெறப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, பூகொடையைச் சேர்ந்த 27 வயதுடைய ஆண் ஒருவரும், தொம்பே பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய குற்ற விசாரணைப் பணியகத்தின் நிதி மற்றும் வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், நேற்று (27) இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிதி மற்றும் வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.