ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க முடியாது – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ


கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீறி அரசாங்கத்தால் செயற்பட முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (20) இடம்பெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் உறுதிப்பாட்டுடனேயே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னரே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதால், பொதுமக்களின் கோரிக்கைகளுக்காக உயர் நீதிமன்றத் தீர்ப்புகளை புறக்கணிக்க முடியாது என அவர் வலியுறுத்தினார். ஒருவரின் அந்தஸ்து எதுவாக இருந்தாலும் சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் நடைமுறையிலுள்ள சட்டங்களின்படியே அரசாங்கம் செயற்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.