கத்தாரில் பாதுகாப்புத் துறை நிபுணர்கள் பங்கேற்கும் Milipol Qatar 2026 கண்காட்சி ஆரம்பம்!

கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியின் ஆதரவின் கீழ், Milipol Qatar 2026 பாதுகாப்புக் கண்காட்சி இன்று (20) தோஹாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கத்தார் உள்துறை அமைச்சரும், லெக்வியா பாதுகாப்புப் படையின் தளபதியுமான ஷேக் கலீஃபா பின் ஹமத் பின் கலீஃபா அல் தானி இதனை அறிவித்துள்ளார்.

உலகின் முன்னணி நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்புத் துறை நிபுணர்கள் பங்கேற்கும் இக்கண்காட்சியில், நவீன பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படுவதுடன், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் முதலீட்டு வாய்ப்புகளும் ஆராயப்படுகின்றன.

இதற்கிடையில், 2027 முதல் 2030ஆம் ஆண்டு வரையான பாதுகாப்பு ஒத்துழைப்புச் செயல் திட்டத்தில் கத்தார் மற்றும் பிரான்ஸ் உள்துறை அமைச்சுகள் கையெழுத்திட்டுள்ளன.