
(கே.ஏ.ஹமீட்)
அட்டாளைச்சேனை அக்/அல் -ஜென்னா பாடசாலையின் புதிய அதிபரின் MIM. றியாஸ் வருகையோடு அவரது தனிப்பட்ட முயற்சியினால் அவரின் பாடசாலை நண்பரும் MSM. இஸ்ஸதீன்.JP அவர்களின் உதவியோடு இன்று (28) இப்பாடசாலைக்கு புதிய கதிரை ( Revollving Chair )மற்றும் ஒருதொகுதி ( box files) அட்டாளைச்சேனை மண்ணின் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ MS. உதுமாலெப்பை அவர்களின் சகோதரர் MSM. இஸ்ஸதீன்.JP அவர்களது MSM. இஸ்ஸதீன் ஜே.பி பெளண்டேசன் ஊடாக அவ்வமைப்பின் செயலாளர் R. றசீன் அவர்களினால் உத்தியோகபூர்வமாக பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் ALM.பசீல் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் F. முகம்மது பெளமி ( அபிவிருத்தி உத்தியோகத்தர்) அவர்கள் இருவரும் இணைந்து மேற்படி பொருட்களை பாடசாலை சார்பாக பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
உதவி செய்த அனைவருக்கும் அதிபர் நன்றி தெரிவித்தார்.


