சவூதி அரேபியாவில் இலங்கை இளைஞருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து! – அரசாங்கத்தின் இராஜதந்திர முயற்சிக்கு வெற்றி!

சவூதி அரேபிய உயர் நீதிமன்றத்தால் அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை, 2026 ஒக்டோபர் 13ஆம் திகதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தொடர்ச்சியான இராஜதந்திர மற்றும் சட்ட ரீதியான முயற்சிகளின் பலனாகவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் ஒத்துழைப்பு வழங்கிய சவூதி அரேபிய அரசாங்கத்திற்குத் தனது நன்றிகளைத் தெரிவித்த பிரதி அமைச்சர், இலங்கைத் தூதுவர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர், அதிகாரிகள் மற்றும் இருநாட்டு சட்டக் குழுவினரின் அர்ப்பணிப்புமிக்க சேவைகளுக்கும் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.