
சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் நடைமுறையில் உள்ள விதிமுறைகள் மற்றும் நிலையான உத்தரவுகளைப் புதுப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் இடைக்கால அறிக்கை இன்று (14) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
கடந்த 08ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் முப்பீடங்களையும் சேர்ந்த மகா சங்கத்தினருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இக்குழு நியமிக்கப்பட்டது.
பௌத்த பிக்குகள் மற்றும் ஏனைய மதத் தலைவர்கள் சிறையில் அடைக்கப்படும் சந்தர்ப்பங்களில் நடைமுறையில் உள்ள விதிமுறைகளைத் திருத்துவதற்கான முன்மொழிவுகள் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
குழுவின் தலைவர் பிரின்ஸ் சேனாதீர உள்ளிட்ட அதிகாரிகள் இந்த அறிக்கையைச் சமர்ப்பித்தனர்.


