
சவூதி அரேபியாவின் தம்மாம் சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று (12) திங்கட்கிழமை இயக்கப்படவிருந்த விமான சேவையை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இரத்து செய்துள்ளது.இதனை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா உறுதிப்படுத்தியுள்ளார்.மேலும், நாளை (13) செவ்வாய்க்கிழமை திட்டமிடப்பட்டுள்ள விமான சேவைகள் தொடர்பான அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


