நாவலப்பிட்டி நகர சபை தலைவர் உட்பட 4 பேர் கைது

நாவலப்பிட்டி நகர சபையின் தலைவர், அவரது மகன் மற்றும் மருமகன் உட்பட நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வீதி விபத்து ஒன்றை தொடர்ந்து ஏற்பட்ட மோதலின் போது, நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்விவகாரத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.