முன்னாள் ராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கை தொடர கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி!

முன்னாள் ராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராக லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கை முன்னெடுத்துச் செல்ல முடியாது எனக் கூறி பிரதிவாதிகள் முன்வைத்த ஆரம்பகட்ட எதிர்ப்புகளை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(08) நிராகரித்துள்ளது.

இதற்கமைய, தற்போதுள்ள குற்றப்பத்திரிகையின் கீழ் வழக்கை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன உத்தரவிட்டுள்ளார்.