ஆஸ்திரேலியாவில் 6 சிறுமிகளுக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கை பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை!

இலங்கையில் பிறந்த பௌத்த பிக்குவொருவருக்கு, ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள ஆலயமொன்றில் ஆறு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 13 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.71 வயதான நவோத்துன்னே விஜித தேரர், மெல்போர்னின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள தம்ம சரண விகாரையின் பிரதம பிக்குவாக பணியாற்றியவர் ஆவார்.

அவர் 2025 ஆம் ஆண்டு 17 குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டிருந்தார்.இதில் சிறாருடன் பாலியல் உறவு கொண்டமை தொடர்பான 9 குற்றச்சாட்டுகளும், சிறார்களிடம் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டமை தொடர்பான 8 குற்றச்சாட்டுகளும் அடங்குகின்றன. 1994 முதல் 2002 வரை இடம்பெற்ற இந்த சம்பவங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீண்டகால உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விஜித தேரர் குறைந்தபட்சம் 9 ஆண்டுகள் 4 மாதங்கள் சிறையில் இருக்க வேண்டியிருக்கும் என்றும், பின்னர் நாடுகடத்தப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.