கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த மதிப்பு 20 நாட்களில் ரூ. 324 பில்லியனால் வீழ்ச்சி!

இலங்கையின் கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த சந்தை மூலதன மதிப்பு, ஒக்டோபர் மாதத்தின் முதல் 20 நாட்களில் சுமார் 323.97 பில்லியன் ரூபாவால் வீழ்ச்சியடைந்துள்ளது.தொடர்ச்சியான சந்தைச் சரிவுக்கு மத்தியில், நேற்று (20) அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 75.64 புள்ளிகளால் குறைந்து 19,983.78 புள்ளிகளாகப் பதிவானது. இதன் மூலம், ASPI சுட்டெண் 20,000 புள்ளிகளுக்குக் கீழிறங்கியுள்ளது.

S&P SL20 சுட்டெண்ணும் 19.24 புள்ளிகளால் சரிந்து 5,681.51 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் 7,548.18 பில்லியன் ரூபாவாக இருந்த சந்தையின் மொத்த மதிப்பு, நேற்று வர்த்தகம் நிறைவடைந்தபோது 7,224.21 பில்லியன் ரூபாவாகக் குறைந்துள்ளது.