இலங்கையில் மின்னல் தாக்கி இரு பெண்கள் உயிரிழப்பு – ஒருவர் காயம்!

இலங்கையின் அனுராதபுரம், மெதவச்சிய, ரம்பேவ பகுதியில் இன்று (20) நண்பகல் மின்னல் தாக்கியதில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

வயலில் வேலை செய்துகொண்டிருந்த மூவரும் மழை பெய்ததால் அங்கிருந்த மரமொன்றின் அருகில் ஒதுங்கியுள்ளனர். இதன்போது அந்த இடத்தில் மின்னல் தாக்கியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த மூவரும் ரம்பேவ பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், இரு பெண்களும் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்களில் ஒருவர் 61 வயதுடையவர் எனவும், மற்றையவர் 26 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.