
இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்புகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை முன்னிலைப்படுத்தும் 2026 இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு மாநாடு, கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் இன்று (12) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, துறைமுக நகரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுற்றுலாத்துறை, தகவல் தொடர்பு மற்றும் உட்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் உருவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.
முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்க வெளிப்படையான நிர்வாகம், தேவையான சட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும் குறிப்பிட்டார். எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்திலும் இவ்விடயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து செயற்படக்கூடிய வலுவான வர்த்தக சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.


