
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் முற்றுகைக்கு மத்தியிலும், ஈரான் 51.4 இலட்சம் டன் பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஈரானின் மிகப்பெரிய வர்த்தகத் துறைமுகமான ஷஹீத் ராஜாயி துறைமுகத்திலிருந்து, ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்த ஏற்றுமதி இடம்பெற்றுள்ளதாக ஹோர்மோஸ்கான் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனை அந்நாட்டின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், ஈரானிய கச்சா எண்ணெய், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் பெட்ரோ இரசாயனப் பொருட்களின் போக்குவரத்துடன் தொடர்புடைய தனிநபர்கள், வலையமைப்புகள் மற்றும் 17 கப்பல்களுக்கு எதிராக அமெரிக்கா புதிய தடைகளை விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


