
பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைத்து சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் நடைபெறும் ICPIES 2026 சர்வதேச மாநாடு இன்று (30) கொழும்பில் ஆரம்பமானது.
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் Cinnamon Lakeside ஹோட்டலில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கலந்துகொண்டார்.
“சுற்றுச்சூழல் அமைப்புகளின் மீள்திறன் மற்றும் சமூக நலனுக்கான சுற்றுச்சூழல் சார்ந்த புத்தாக்கங்கள்” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் இம்மாநாடு செப்டம்பர் 30 மற்றும் ஒக்டோபர் 1 ஆகிய தினங்களில் நடைபெறுகிறது.
பிளாஸ்டிக் மாசுபாடு, நுண்ணிய பிளாஸ்டிக்குகளின் தாக்கம், கழிவு முகாமைத்துவம், சுழற்சி பொருளாதாரம், சுற்றுச்சூழல் தொழில்நுட்ப புத்தாக்கங்கள், செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள் மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக இதில் ஆராயப்படுகின்றன.


