
கோடிக்கணக்கான ரூபாய் நிதி மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டப்பட்டுள்ள த்ரிகோ குழும நிறுவன உரிமையாளர் திலிணி பிரியமாலியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபருக்காக பிணை நிற்பதாகக் கூறிய இருவர், இவ்வழக்கில் பிணையாளிகள் இல்லை என்பது தெரியவந்ததை அடுத்து இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
வழக்கில் தொடர்புடைய ஜானகி சிறிவர்தன வேறு வழக்கின் கீழ் விளக்கமறியலில் உள்ள நிலையில், போரெல்லே சிறிசுமன தேரர் நீதிமன்றில் ஆஜராகி வெளிநாடு செல்ல அனுமதி பெற்றார். அனைத்து வழக்குகளும் எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.


