
நிர்மாணத் துறையை மீண்டும் வலுப்படுத்தி நிலைபேறான வளர்ச்சியை ஏற்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் அத்துறையின் முக்கிய பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் நிர்மாணத் துறை எதிர்கொள்ளும் சவால்கள், தடைகள் மற்றும் நடைமுறை சிக்கல்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டதுடன், பொருளாதார வளர்ச்சிக்கு இத்துறை வழங்கும் நேரடிப் பங்களிப்பை கருத்திற் கொண்டு அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அமைச்சர்களான கலாநிதி அனில் ஜயந்த பெனாண்டோ, வைத்தியர் சுசில் ரணசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும உட்படப் பல உயர் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


