ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரண்: உயர்நீதிமன்ற தீர்மானம்

ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலத்தின் சில ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரணானவை என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் இன்று பாராளுமன்றத்திற்கு அறிவித்தார். உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை சபைக்குத் தெரிவிக்கும்போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, இச்சட்டமூலத்தின் 17 ஆவது சரத்தானது அரசியலமைப்புடன் முரண்படுவதால், அதனை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு மற்றும் பொதுமக்கள் வாக்கெடுப்பு (சர்ஜன வாக்கெடுப்பு) அவசியம் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.