
நீதித்துறை திருத்தச் சட்டமூலத்தின் ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரணானவை அல்லவென உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் இன்று (22) பாராளுமன்றத்திற்கு அறிவித்தார். பாராளுமன்ற அமர்வு ஆரம்பமான போது, உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை சபைக்குச் சமர்ப்பித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக, குறித்த திருத்தச் சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையைப் பயன்படுத்தி நிறைவேற்ற முடியும் என்றும் உயர்நீதிமன்றம் தனது தீர்மானத்தில் சுட்டிக்காட்டியுள்ளதாக சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.


