
இலங்கையின் மூத்த பாடகி விஷாரத் கலாநிதி நந்தா மாலினி (82) நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இதனையடுத்து, ஆகஸ்ட் 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகள் தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளன.1943 ஆகஸ்ட் 23இல் பிறந்த இவர், 11 சரசவியா விருதுகள் மற்றும் 8 ஜனாதிபதி விருதுகளை வென்று இசைத்துறையில் முத்திரை பதித்தவர்.
அன்னாரின் உடல் நுாகேகொடையில் உள்ள ‘நந்தா மாலினி சங்கீத ஆசிரமத்தில்’ வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, சனிக்கிழமை பிற்பகல் இறுதிச் சடங்குகள் நடைபெறும். இவரது மறைவு இலங்கை கலை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.


