
உலகிலேயே முதல்முறையாக தனது போயிங் 787-9 ரக விமானங்களில் ஸ்டார்லிங்க் (Starlink) அதிவேக இணைய சேவையை இணைத்து கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. மேலும், கடந்த ஏழு மாதங்களில் போயிங் 787-8 விமானங்களிலும் இச்சேவை வெற்றிகரமாக விரிவுபடுத்தப்பட்டு, தற்போது மொத்தம் 150 அகலப் பரப்பு (widebody) விமானங்கள் ஸ்டார்லிங்க் வசதியைப் பெற்றுள்ளன.
2024 அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இச்சேவை மூலம் இதுவரை 86,000-க்கும் மேற்பட்ட விமானப் பயணங்களில் 2.3 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயனடைந்துள்ளனர். மணிக்கு 500 Mbps வரையிலான வேகத்தில், வாயில் முதல் வாயில் வரை (gate-to-gate) முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வரும் இச்சேவை, பயணிகள் 35,000 அடி உயரத்தில் இருந்தவாறே தடங்கலின்றி பணிபுரியவும் அன்பர்களுடன் தொடர்பில் இருக்கவும் வழிவகுக்கிறது.
வரும் 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தனது அனைத்து போயிங் 787 விமானங்களிலும் இச்சேவையை முழுமையாக நிறைவு செய்ய கத்தார் ஏர்வேஸ் இலக்கு நிர்ணயித்துள்ளது.


