கிராமிய உற்பத்திகளை சர்வதேச சந்தைக்கு கொண்டு செல்ல அரசின் புதிய திட்டம்!….

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் (EDB) ஏற்பாடு செய்யப்பட்ட 26 ஆவது ஏற்றுமதியாளர்கள் மாநாடு கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்றது. ஏற்றுமதியாளர்கள் தமது வர்த்தகப் பிரச்சினைகளை நேரடியாக முன்வைத்துத் தீர்வு காண இம்மாநாடு வழியமைத்தது.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த ஏற்றுமதித் தடைகள் தளர்த்தப்பட்டு முழு ஆதரவு வழங்கப்படும் என்றார். மேலும், பிரச்சினைகளுக்கு மாகாண மட்டத்திலேயே தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஏற்றுமதி அளவை (Export volume) அதிகரிப்பதே இலக்கு எனக் குறிப்பிட்ட அவர், கிராமிய உற்பத்திகளைச் சர்வதேச சந்தைக்குக் கொண்டு செல்லத் தேவையான தொழில்நுட்பம், பொதியிடல் விழிப்புணர்வு வழங்கப்பட்டு அனைத்துத் தடைகளும் நீக்கப்படும் எனத் தெரிவித்தார்.