
2026 FIFA உலகக்கிண்ண கால்பந்து தொடரின் ஆர்ஜென்டீனா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதும் இறுதிப்போட்டியை ரசிகர்கள் நள்ளிரவில் கண்டுகளிக்க ஏதுவாக, கேரளா முழுவதும் நாளை திங்கட்கிழமை (ஜூலை 20) பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நடைபெறும் இந்த இறுதிப்போட்டி இந்திய நேரப்படி நள்ளிரவுக்கு மேல் ஆரம்பமாவதால், மாணவர்கள் மற்றும் கால்பந்து ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று கேரள பொதுக்கல்வித் துறை இந்த விசேட விடுமுறையை அறிவித்துள்ளது.
ஆர்ஜென்டீனா அணிக்கு பெரும் ஆதரவு தளம் கொண்ட கேரளாவில், இப்போட்டியை பெரிய திரைகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனினும், இந்த விடுமுறை அறிவிப்பு பாடசாலைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், கல்லூரிகளுக்கு இதுவரை அதிகாரப்பூர்வ விடுமுறை அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


