உலகளவில் திடீரென முடங்கியது பேஸ்புக்

மெட்டா (Meta) நிறுவனத்திற்குச் சொந்தமான பேஸ்புக் (Facebook) சமூக வலைத்தளம் உலகளாவிய ரீதியில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கியுள்ளதாகப் பயனர்கள் தெரிவித்துள்ளனர். இந்த திடீர் முடக்கத்தால், பல பயனர்களால் தங்களது கணக்குகளுக்குள் நுழைய முடியாமலும் (Login Error), நியூஸ் பீடை (News Feed) புதுப்பிக்க முடியாமலும் கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், சிலருக்கு கணக்கு தற்காலிகமாகக் கிடைக்கவில்லை என்ற பிழைச் செய்திகளும் திரையில் தோன்றுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.