
இந்தியாவில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்கிறார். சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வானதைத் தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளார்.
ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜ பெரும்பான்மை பலத்துடன் உள்ளதால், அக்கட்சியைச் சேர்ந்த ஒருவரே புதிய முதல்வராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. அதேசமயம், ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்துள்ள நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு ஆளுநரைச் சந்தித்து நிதிஷ் குமார் ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளார்.


