AFC Champions League Elite 2025/26™: சவூதி அரேபியாவின் அல் அஹ்லி வெற்றி – அல் துஹைல் தொடரிலிருந்து வெளியேற்றம்!

ஏஎப்சி சாம்பியன்ஸ் லீக் எலைட் தொடரின் ரவுண்ட் 16 போட்டியில், கட்டாரின் அல் துஹைல் அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி சவூதியின் அல் அஹ்லி அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது. ஜெத்தாவில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

கூடுதல் நேரத்தின் போது அல் அஹ்லி வீரர் இவான் டோனி அடித்த பெனால்டியை அல் துஹைல் கோல்கீப்பர் தடுத்தார். எனினும், 117-வது நிமிடத்தில் ரியாத் மஹ்ரெஸ் அடித்த அபாரமான இலவச உதை (Free-kick) கோலாக மாற, அல் அஹ்லி வெற்றி பெற்றது. இதன்படி வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள காலிறுதியில் மலேசியாவின் ஜொஹூர் தருல் தாஜிம் அணியுடன் அல் அஹ்லி மோதவுள்ளது.