
முன்னாள் ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய ஊவா மாகாண சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாட்டியங்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் ஊடாக உரிய அரசாங்க நடைமுறைகளைப் பின்பற்றாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று நிறுவனங்களுக்கு மாத்திரம் பொஸ்பேட் ஏற்றுமதி செய்ய வசதி ஏற்படுத்திக்கொடுத்தமை மற்றும் ஏற்றுமதி உரிமங்களைப் பெற்றுக்கொடுத்தமைக்காக 81 இலட்சம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (21) பிற்பகல் கைது செய்யப்பட்ட இச்சந்தேகநபர், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


