
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று (22) அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், 9 பேர் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் நீண்டகாலமாக இடம்பெற்று வந்த இந்த வழக்கில், ஈஸ்டர் தாக்குதல்களுக்கு சதி செய்தல், உதவி மற்றும் ஒத்துழைப்பு வழங்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.வழக்கு தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் தண்டனை தொடர்பான விபரங்கள் நீதிமன்ற அறிவிப்புகளின் அடிப்படையில் வெளியாகவுள்ளன.


