எதிர்க்கட்சித் தலைவர் சஜித் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

கடும் வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளை விசாரிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று கடுவெல உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விஜயம் செய்தார்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, தற்போது கொத்தலாவல மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள குடும்பங்களை அவர் சந்தித்தார். அங்கே, பிரேமதாச அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுடன் நேரடியாகப் பேசி, அவர்களின் உடனடித் தேவைகளை கேட்டறிந்தார்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் நிவாரணமும் ஆதரவும் வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.