
இந்திய விமானப் படையின் An IL-76 விமானம் இலங்கையில் தரையிரங்கியுள்ளது. குறித்த விமானத்தில் விமானப் படைக்கு சொந்தமான விசேட மோப்பநாய்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.நாட்டில் முன்னெடுக்கப்படும் மீட்பு பணிகளுக்கு உதவும் வகையில் மோப்பநாய்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அத்துடன் அனர்த்த நிவாரண பொருட்களும் விமானத்தில் வந்துள்ளன.உள்ளுர் அதிகாரிகளுடன் இணைந்து இந்திய விமானப் படையினர் மீட்பு குழுவினர் பணிகளை முன்னெடுக்கவுள்ளனர்.


