முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னக்கு பிணை

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குருநாகல் மேல் நீதிமன்றம் இன்று (14) இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளது.

கடற்படை புலனாய்வு இயக்குநராக இருந்த காலத்தில், பொத்துஹெரவைச் சேர்ந்த ஒரு இளைஞர் காணாமல் போனது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிக்கத்து.

அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, ஜூலை 2020 முதல் டிசம்பர் 2022 வரை இலங்கை கடற்படையின் 24வது தளபதியாகப் பணியாற்றினார்.