
ஹாரிஸ்பத்துவ – பூஜாபிட்டிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, பல பகுதிகளில் 42 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் அறிவிப்பின்படி, ஒக்டோபர் 21ஆம் திகதி காலை 9.00 மணி முதல் ஒக்டோபர் 23ஆம் திகதி பிற்பகல் 3.00 மணி வரை இந்த நீர்வெட்டு அமுலில் இருக்கும்.மெதவெல, கல்லெனவத்த, கலகெதர மற்றும் மாவத்தகம உள்ளிட்ட பகுதிகள் இதனால் பாதிக்கப்படும்.
நீர்வெட்டுக் காலத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு சபை வருத்தம் தெரிவித்துள்ளதுடன், முன்கூட்டியே நீரைச் சேமித்து சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.


