
துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க, இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் மற்றும் தற்போதைய செயற்பாடுகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
இதன்போது, விமான நிலையத்தின் செயற்பாடுகள், வருமானம், ஊழியர் நியமனங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். மேலும், அங்குள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கும் அவர் விஜயம் செய்தார்.
சுமார் ரூ. 3.046 பில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வசதிகள் வளாகத்தைப் பார்வையிட்ட அமைச்சர், இக்கட்டடத் தொகுதியின் பணிகளை 2027ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்குள் நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.


