நவம்பர் வரை ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படாது – ட்ரம்ப் தெரிவிப்பு!

அமெரிக்காவில் நவம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்கு முன்னர், ஈரான் மீது தாக்குதல் நடத்தப்போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானுடன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தனது சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பெப்ரவரி மாதம் ஈரான் மீது தாக்குதல்களை ஆரம்பித்ததைத் தொடர்ந்து போர் தீவிரமடைந்தது. இதனால் அமெரிக்காவில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளதுடன், ட்ரம்பின் மக்கள் ஆதரவும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. எனினும், ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டலைக் கைவிடப்போவதில்லை என அறிவித்துள்ளது.