
சீனாவின் கடல்நீரை நன்னீராக்கும் திறன் நாளொன்றுக்கு 30 இலட்சம் தொன்களைக் கடந்தது!
சீனாவின் கடல்நீரிலிருந்து உப்பை நீக்கி நன்னீராக்கும் மொத்த உற்பத்தித் திறன் நாளொன்றுக்கு 30 இலட்சம் தொன்களைக் கடந்துள்ளதாக அந்நாட்டின் இயற்கை வள அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் திட்டங்களின் மொத்த உற்பத்தித் திறன் நாளொன்றுக்கு 10 இலட்சம் தொன்களைத் தாண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் கடல்நீரை நன்னீராக்கும் திட்டங்களின் நாளாந்த உற்பத்தித் திறனை 45 இலட்சம் தொன்களாக அதிகரிப்பது சீனாவின் இலக்காகும்.
குறிப்பாக, நீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு இத்திட்டங்கள் உதவுகின்றன. மேலும், தொழிற்சாலைகளுக்குத் தேவையான நீரை வழங்குவதுடன், வறண்ட மற்றும் கடலோரப் பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் இவை பங்களிக்கின்றன.


