
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இஸ்ரேல் நோக்கிப் பறந்த flydubai (FZ1073) விமானத்தின் இணை விமானி, விமானத்தைக் கீழே வீழ்த்திச் சதி செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் கத்திக்குத்துக்கு இலக்காகியும், 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய முதன்மை விமானி ஸ்மித் மச்சாரை (Smit Machchar) இஸ்ரேல் மற்றும் இந்தியப் பிரதமர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
30 விநாடிகளுக்குள் விமானம் சுமார் 14,000 அடிகள் வேகமாகக் கீழே சரிந்த நிலையில், படுகாயமடைந்த ஸ்மித் மச்சார் விமானக் அறை கதவைத் திறந்து எச்சரித்துள்ளார். இதனால் மற்றவர்கள் உள்ளே நுழைந்து விமானத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவரை “உண்மையான வீரன்” என்றும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவரது துணிச்சலையும் பாராட்டியுள்ளனர். தற்போது தபூக் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவரது உடல்நிலை சரியாய் வருகிறது.இந்தச் சம்பவம் குறித்து flydubai நிறுவனம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.


