ரணிலின் பாதுகாப்பு அதிகாரியை தாக்கிய ஊடகவியலாளர் கைது!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்ற நிகழ்வொன்றில், அவரது பிரமுகர் பாதுகாப்புப் பிரிவு (MSD) அதிகாரியை கெமெராவால் தாக்கியதாகக் கூறப்படும் தனியார் ஊடக ஒளிப்பதிவாளர் இன்று (01) கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையினரின் அழைப்பாணைக்கு அமைய, சட்டத்தரணியுடன் கொழும்பு கொம்பனித்தெரு காவல் நிலையத்திற்கு வாக்குமூலம் வழங்கச் சென்றபோதே அவர் கைது செய்யப்பட்டார்.தாக்குதல் நடத்திய காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், காயமடைந்த காவல் அதிகாரி A.H. மகேஷ் ரஞ்சன் நாரஹேன்பிட்டி காவல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.