
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ள புதிய திருத்தத்தின்படி, இன்று (30) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
அதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லிட்டரொன்றின் விலை ரூ.15 அதிகரிக்கப்பட்டு ரூ.414 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், சூப்பர் டீசல் லிட்டரொன்றின் விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டு ரூ.528 ஆக உயர்ந்துள்ளது.
அதேவேளை, சாதாரண டீசல் லிட்டரொன்றின் விலை ரூ.10 அதிகரிக்கப்பட்டு ரூ.392 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒக்டேன் 95 பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. ஒக்டேன் 95 பெற்றோல் லிட்டரொன்றின் விலை ரூ.475 ஆகவும், மண்ணெண்ணெய் லிட்டரொன்றின் விலை ரூ.285 ஆகவும் தொடர்கிறது.
இந்த புதிய விலை திருத்தம் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


