
ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரின் இடையே, இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் கலாநிதி செய்யத் அப்பாஸ் அராக்சி (Dr. Seyed Abbas Araghchi) ஆகியோருக்கு இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தை நியூயோர்க்கில் நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது தற்போதைய பிராந்திய மற்றும் சர்வதேச சூழ்நிலைகள் குறித்து இரு அமைச்சர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகளுக்கு தீர்வு காண இராஜதந்திர வழிகள் மற்றும் அமைதியான பேச்சுவார்த்தைகள் மூலம் விரைவாக முடிவுகளை எட்டுமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை விடுத்தார்.
மேலும், பிராந்திய ஸ்திரத்தன்மையை மீண்டும் ஏற்படுத்துவதற்கு தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். இத்தகவலை அமைச்சர் விஜித ஹேரத் தனது உத்தியோகபூர்வ ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.


