ஹொரணையில் ரூ.38 மில்லியன் செலவில் 2 கி.மீ. வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்

களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை, கும்புக படுவிட்ட – நாரங்கஹஹேன பகுதியில் ரூ.38 மில்லியன் செலவில் 2 கிலோமீற்றர் நீளமான வீதியை காபட் இட்டு அபிவிருத்தி செய்யும் பணிகள் இன்று (27) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு அமைவாக, களுத்துறை மாவட்ட மக்களின் கிராமிய மற்றும் நகர்ப்புற வீதி வலையமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான தனுஷ்க ரங்கநாத், ஓஷானி உமங்கா, ஹொரணை பிரதேச சபை தலைவர் நிர்மல டி சில்வா, உப தலைவர் பியசேன அமரகோன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மேலும், ஹொரணை பிரதேச சபை உறுப்பினர்களான குமார கமகே, விஜயசிறி பெர்னாண்டோ, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதி திட்டப் பணிப்பாளர் ஜே. ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட அரச அதிகாரிகள், பொறியியலாளர்கள் மற்றும் பிரதேச மக்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.