
அதிகபட்ச சில்லறை விலையை விட (MRP) இருமடங்கு அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்ற எல்ல பகுதியில் அமைந்துள்ள ‘Mandala Cafe & Bar’ உணவகத்திற்கு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் 10 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் (CAA) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 100 ரூபாய் பெறுமதியான ஒரு லீட்டர் குடிநீர் போத்தல் 200 ரூபாய்க்கு விற்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் உணவக நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
தற்போது நடைமுறையிலுள்ள வர்த்தமானி அறிவித்தலின்படி, ஒரு லீட்டர் குடிநீர் போத்தலின் அதிகபட்ச சில்லறை விலை 120 ரூபாவாகும். சுற்றுலாப் பகுதிகளில் இயங்கினாலும் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விற்க முடியாது என எச்சரித்துள்ள CAA, மேலதிக விலை ஈர்ப்பு குறித்து 1977 என்ற இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறு நுகர்வோரைக் கேட்டுக்கொண்டுள்ளது.


