
புத்தசாசன அமைச்சின் முன்னாள் செயலாளரான கமல் பண்டார திசாநாயக்க, அரசாங்கத்திற்கு சுமார் 4.79 மில்லியன் ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமைச்சின் புத்தகங்களை அச்சிடுவதற்காக, அரச கொள்முதல் விதிமுறைகளை பின்பற்றாமல் தமக்கு சாதகமான நிறுவனத்திற்கு ஒப்பந்தங்களை வழங்கியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
முறையற்ற கொள்முதல் நடைமுறை மற்றும் புத்தகங்கள் அமைச்சுக்கு கிடைக்காமலேயே கொடுப்பனவுகளை வழங்கியதன் மூலம் அரசுக்கு 4.79 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இலஞ்ச ஆணைக்குழு தெரிவித்துள்ளது.சந்தேகநபரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஆணைக்குழு முன்னெடுத்து வருகின்றது.


