வங்கி கணக்கு, வாகனப் பதிவு மற்றும் கடன் அட்டைகளுக்கு இனி TIN சான்றிதழ் கட்டாயம்!

வரும் நவம்பர் 01 முதல் முக்கிய நிதி மற்றும் சட்டபூர்வ சேவைகளைப் பெற வரி செலுத்துவோர் அடையாள இலக்க (TIN) சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

புதிய வங்கிக் கணக்குகளை ஆரம்பித்தல், கடன் அட்டைகளுக்கு (Credit Cards) விண்ணப்பித்தல், வாகனப் பதிவு மற்றும் வருமான உரிமம் புதுப்பித்தல், கட்டடத் திட்ட அனுமதி பெறுதல் மற்றும் நிறுவனப் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல் போன்ற சேவைகளுக்கு இச்சான்றிதழ் அவசியமாகும்.

நாட்டின் வரி வரம்பை விரிவுபடுத்தவும் நிதி நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை பேணவுமே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

#TIN #SriLankaNews #InlandRevenue #SriLankaTax #SriLankaEconomy