
எல்ல – கித்தல் எல்ல (Kithal Ella) பகுதியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியைப் பார்வையிடச் சென்ற 27 வயதுடைய இத்தாலியப் பெண் ஒருவர், தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று (24) காலை இத்தாலிய நாட்டைச் சேர்ந்த குறித்த யுவதி தனது நண்பர் ஒருவருடன் கித்தல் எல்ல நீர்வீழ்ச்சியைப் பார்வையிடச் சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த போது, திடீரென கால் நழுவி கீழே விழுந்து பலத்த காயங்களுக்கு உள்ளாகியதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.காயமடைந்த அவர் உடனடியாக தெமோதரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் விசாரணைகளை ஆரம்பித்துள்ள எல்ல பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


