
கிங் கங்கை பகுதிக்கு சிறிய அளவிலான வெள்ள எச்சரிக்கை
கிங் கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், அதன் கரையோரத்தில் அமைந்துள்ள தவலம, நாகொட, பத்தேகம மற்றும் வெலிவிட்டிய – திவித்துர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளின் தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களில் சிறியளவிலான வெள்ள நிலை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக, கங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள நீர்நிலைகளை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


