
என்.எம்.எம்.பாயிஸ்
2026ம் ஆண்டு இடம்பெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் 65 மாணவ மாணவிகள் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று வரலாற்று சாதனையை நிலைநாட்டி இருந்தார்கள். மேலும் பரீட்சைக்குத் தோற்றிய 172 மாணவர்களில் 162 பேர் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று 92.4% என்ற உயர்சாதனையை இப் பாடசாலை பெற்றிருந்ததது.தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் 65 மாணவ மாணவிகளை சித்தியடையச் செய்து வலய பாடசாலைகளுக்கிடையே கூடிய எண்ணிக்கையான மாணவர்களை சித்தியடையச் செய்த பெருமையை இப் பாடசாலை தொடர்ந்தும் நிலைநாட்டி இருந்தது.அதனடிப்படையில் மாணவர்களின் பெற்றோர்களின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை (22) வரலாற்றில் என்றும் இடம்பெறாத வகையில் பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களும் இங்கு கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும். இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயத்தின் கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் கே. ஜெயவதனன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் காத்தான்குடி கேட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜே.மர்சூக் , பிரதிக் கல்விப் பணிப்பாளர் என்.எம்.சாலித் (உடற்கல்வி) , மட்டக்களப்பு மத்தி வலய விஞ்ஞான உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். பாயிஸ் மற்றும் வலயத்தின் ஆசிரிய ஆலோசகர்கள் சகிதம் இந் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் பாடசாலையின் பிரதி உதவி அதிபர்கள் மற்றும் அசிரியர்கள் பகுதித்தலைவர்கள் உட்டபட SDEC, PPA உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் நவலன்விரும்பிகள் சகிதம் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.


