குவைத்தில் கைது செய்யப்பட்ட 20 இலங்கைத் தொழிலாளர்கள் அதிகாலை நாடு திரும்பினர்!

குவைத் நாட்டில் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த 20 இலங்கையர்கள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட நிலையில், இன்று அதிகாலை கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தை வந்தடைந்தனர்.ஒப்பந்த காலத்திற்கு மாறாக பணிபுரிந்த இடங்களில் இருந்து தப்பிச் சென்று வேறு இடங்களில் பணிபுரிந்தபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜஸீரா (Jazeera) சேவைக்குச் சொந்தமான J9-551 வானூர்தி மூலம் இன்று அதிகாலை 3.10 மணியளவில் இவர்கள் இலங்கை வந்தடைந்தனர்.

இவ்வாறு நாடு திரும்பியவர்கள் தங்களது சொந்த இடங்களுக்குச் செல்வதற்கான போக்குவரத்து மற்றும் நிதி வசதிகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.