மாற்றுத்திறனாளி சாரணர்களுக்கு ‘அலரி மாளிகையில்’ பிரதமர் கௌரவம்!

இலங்கை சாரணர் சங்கத்தின் மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்த திறமைமிகு சாரணர்கள், அமைப்பின் உயரிய விருதான ‘Blue All Round Cord’ விருதைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இச்சாதனையாளர்களைப் பாராட்டி கௌரவிக்கும் விசேட நிகழ்வு இன்று அலரி மாளிகையில் நடைபெற்றது.நிகழ்வில் பங்கேற்ற பிரதமர், மாற்றுத்திறன்கொண்ட பிள்ளைகளின் அசாத்திய திறமைகளையும் தளராத விடாமுயற்சியையும் மனதாரப் பாராட்டி வாழ்த்தினார்.

சவால்களையும் தடைகளையும் தங்களின் தன்னம்பிக்கையால் தகர்த்தெறிந்து, நாட்டின் உயரிய விருதைத் தட்டிச்சென்ற இந்தச் சிறுவர்களின் சாதனை, சமூகம் முழுமைக்கும் மாபெரும் ஊக்கமாகவும் வழிகாட்டியாகவும் அமைகிறது.